‘வில் ஸ்மித் செயல்... இரு உண்மைகளை சொல்லியுள்ளது..’ - பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் 94-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதினை ‘கிங் ரிச்சர்ட்’ படத்திற்காக வில்ஸ்மித் வெற்றி பெற்றார்.
ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் தொகுப்பாளர் கிறிஸ் ராக், வில் ஸ்மித்தின் மனைவியின் Hair Style பற்றி அனைவர் முன்பும் கேலி செய்துக்கொண்டிருந்தார். ஆரம்பத்தில் சிரித்துக்கொண்டிருந்த வில் ஸ்மித், ஒரு கட்டத்தில் பொறுத்துக்கொள்ள முடியாமல் மேடைக்கு ஏறி வந்து, தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டு கீழே இறங்கினார்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறி சமூகவலைத்தளங்களில் இது குறித்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில், நடிகர் வில் ஸ்மித் செயல் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், ஒருவரின் உடல் குறையை நகைச்சுவைக்கான கருப்பொருள் ஆக்காதீர்கள், மனைவியையும், அவரின் உணர்வையும் மதித்தால் உலகம் உங்களை மதிக்கும் என்ற இரு உண்மைகளை சொல்லியுள்ளது இந்த நிகழ்வு என்று ஆஸ்கர் விருது விழாவில் மேடையில் கிரிஸ் ராக்கை, நடிகர் வில் ஸ்மித் அறைந்தது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டியுள்ளார்.
