வில் ஸ்மித் மனைவிக்கு இப்படி ஒரு நோயா? வெளியான தகவல் - ரசிகர்கள் அதிர்ச்சி
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் 94-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதினை ‘கிங் ரிச்சர்ட்’ படத்திற்காக வில்ஸ்மித் வெற்றி பெற்றார்.
ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் தொகுப்பாளர் கிறிஸ் ராக், வில் ஸ்மித்தின் மனைவியின் Hair Style பற்றி அனைவர் முன்பும் கேலி செய்துக்கொண்டிருந்தார்.
ஆரம்பத்தில் சிரித்துக்கொண்டிருந்த வில் ஸ்மித், ஒரு கட்டத்தில் பொறுத்துக்கொள்ள முடியாமல் மேடைக்கு ஏறி வந்து, தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டு கீழே இறங்கினார்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறி சமூகவலைத்தளங்களில் இது குறித்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
தற்போது வில் ஸ்மித் மனைவிக்கு ஏற்பட்ட நோய் குறித்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் வில் ஸ்மித்தின் மனைவிக்கு Alopecia என்ற நோய் பாதித்துள்ளது. இந்த நோயால் பாதித்த அவருக்கு தலை முதல் உடல் முழுவதும் முடி உதிர்ந்துள்ளது.
இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடல் மற்றும் தலையில் முடிகள் கொத்து கொத்தாக உதிர்ந்து விடும். இந்த நோய் முடி உதிர்வு ஒருவருக்கு ஒருவர் வேறுபடும். இந்நோய்க்கு உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால், அதிகமான பாதிப்ப்பை ஏற்படுத்தி விடும். இந்த நோய் யாரை வேண்டுமானாலும் தாக்குமாம்.
பாடகரும், பேச்சு நிகழ்ச்சி தொகுப்பாளருமான ஜடா பிங்கெட் ஸ்மித், கடந்த ஆண்டு டிசம்பரில் தனது முடி உதிர்வு குறித்து வீடியோ ஒன்றை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.