என்ன ஒரு தைரியம்... - வில் மிஸ்த் செயல் குறித்து புகழ்ந்து தள்ளிய நடிகை வனிதா
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் 94-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதினை ‘கிங் ரிச்சர்ட்’ படத்திற்காக வில்ஸ்மித் வெற்றி பெற்றார்.
ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் தொகுப்பாளர் கிறிஸ் ராக், வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட் ஸ்மித்தின் Hair Style பற்றி அனைவர் முன்பும் கேலி செய்துக்கொண்டிருந்தார்.
ஆரம்பத்தில் சிரித்துக்கொண்டிருந்த வில் ஸ்மித், ஒரு கட்டத்தில் பொறுத்துக்கொள்ள முடியாமல் மேடைக்கு ஏறி வந்து, தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டு கீழே இறங்கினார்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறி சமூகவலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறியது.
இது குறித்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாக பரவியது. தனது மனைவி குறித்து மேடையில் கிண்டல் செய்த தொகுப்பாளரை அறைந்ததற்காக நடிகர் வில் ஸ்மித் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டார்.
இந்நிலையில், இது குறித்து நடிகை வனிதா தனது இன்ஸ்டா பக்கத்தில், தனது மனைவியை காக்கும் தைரியம். அது போல தனது தவறை ஒப்புக் கொள்ளும் பண்பு... நான் உங்களின் மிகப் பெரிய ரசிகையாக இருப்பதில் பெருமைப்படுகிறேன் வில் ஸ்மித்" என்று பதிவிட்டுள்ளார்.