ஜெபம் பணியாவது ஜெயிக்க வைப்போம் - விஜய்க்காக களமிறங்கிய ரசிகைகள்
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாடு அரசியலில் அழுத்தமான தாக்கத்தை வெளிப்படுத்த தீவிரமாக வருகின்றது.
விஜய் தமிழக வெற்றிக் கழகம்
கட்சி துவங்கியவுடன் தேசிய செய்திகளில் இடம் பெற்றது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் கட்சி பணியில் தீவிரம் காட்டி வரும் சூழலில், மறுபுறம் நிர்வாகிகளுக்கும் தீவிர மக்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில், காஞ்சிபுரம் கல்பாக்கத்தில் பகுதியில் குடிசை வாழ் மக்களுக்கு கட்சி நிர்வாகிகள் முதியோர் இல்லங்கள், ஆதரவற்ற குழந்தைகள் மையங்களில் பொதுமக்களுக்கு அறுசுவை உணவுகளை வழங்கினர்.
ஜெபம்
அப்பகுதியில் குழுமியிருந்த பல முதியவர்கள் விஜய் தான் அடுத்து ஆட்சிக்கு வர வேண்டும் என தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர். அதில் பேசிய சிலர், அரசியலுக்கு வருவதற்கு முன்பாகவே விஜய் நிறைய உதவிகளை செய்கிறார்.
அடுத்த முறை நங்கள் நிச்சயமாக விஜய்க்கு தான் ஓட்டு போடுவோம். ஜெபம் பண்ணியாவது அவரை ஆட்சியில் அமர வைப்போம், விஜய் கட்டாயம் ஆட்சிக்கு வர வேண்டும் என அழுத்தமாக கூறி சென்றனர்.