தவெகவை வீழ்த்த எதிர் துருவ கட்சிகள் ஒன்று சேருமா? சூடுபிடிக்கும் அரசியல் களம்

Tamil nadu ADMK DMK TVK
By Vinoja May 07, 2026 09:45 AM GMT
Report

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில் சுமார் 108 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.

ஆனால் ஆட்சியமைக்க குறைந்தது இன்றும் 10 தொகுதிகளின் ஆதரவு தேவைப்படுகின்றது. எனவே தவெக ஆட்சியமைப்பதைத் தடுக்க திமுக மற்றும் அதிமுக போன்ற எதிர் துருவ கட்சிகள் ஒன்று சேருமா அல்லது கூட்டணி அமைக்குமா என்ற விவாதங்கள் அரசியல் வட்டாரத்தில் சூடுபிடித்துள்ளன.

தவெகவை வீழ்த்த எதிர் துருவ கட்சிகள் ஒன்று சேருமா? சூடுபிடிக்கும் அரசியல் களம் | Will Polar Opposite Parties To Defeat Tvk

அது குறித்த தகவல்கள் வெளியாகி மக்கள் மத்தியில்  பெரும் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது.தவெக ஆட்சியை அமைப்பதைத் தடுக்க, பரம எதிரிகளான திமுகவும் அதிமுகவும் கைகோர்க்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இவ்வாறு கொள்கை ரீதியாக வேறுபட்ட திமுக மற்றும் அதிமுக ஆகியவை இணைந்து, சிறிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க முயற்சிக்கலாம் என்ற தகவல் ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.