I.N.D.I.A கூட்டணியின் 3-வது கூட்டம்...பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்படுவாரா?
எதிர்க்கட்சிகளின் கூட்டணியான I.N.D.I.A கூட்டணியின் 3- கூட்டம் இன்று மும்பையில் நடைபெறவுள்ள நிலையில், இதில் பிரதமர் வேட்பளார் அறிவிக்கப்படுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல்
வரும் 2024-ஆம் ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 10 ஆண்டு ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பாஜகவும், மீண்டும் ஆட்சியை கைப்பற்றிட காங்கிரஸ் கட்சியும் பெரும் முன்னைப்புகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், தான் நாட்டிலுள்ள 26 கட்சிகளை ஒன்றிணைத்து மாபெரும் எதிர்க்கட்சி கூட்டணியை காங்கிரஸ் கட்சி திரட்டியுள்ளது. இந்த கூட்டணி ஏற்கனவே இரண்டு முறை பீகார் மற்றும் பெங்களுருவில் இரண்டு கூட்டங்களை நடத்தி தேர்தல் குறித்து விவாதித்துள்ளது
யார் பிரதமர் வேட்பாளர்?
பாஜகவில் வலுவாக அடுத்த பிரதமர் வேட்பாளர் நிச்சயமாக மோடி தான் என பிரச்சாரம் மேற்கொள்ள பட்டு வரும் நிலையில், தற்போது, இந்தியா கூட்டணியில் அந்த முடிவில் பெரும் குழப்பங்கள் நிலவி வருகிறது. ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என திமுக, காங்கிரஸ் கட்சிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையிலும், சில கூட்டணி கட்சிகள் அதற்கு முரண்பாடான கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.
இந்தியா கூட்டணியின் 3-வது கூட்டம் இன்று மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் நடைபெறவுள்ளது. இதில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த பல முக்கிய தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலினும் இன்று மும்பை விரைந்துள்ளார்.
தற்கிடையில், கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு எதிர்க்கட்சி கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற முடிவு எடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு வலுவாக எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.