மிரட்டல்களுக்கு பணிய மாட்டேன் - நடிகர் சித்தார்த்

india yogi siddharth
By Irumporai Apr 29, 2021 09:16 AM GMT
Report

உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து விமர்சனம் செய்தற்காக நடிகர் சித்தார்த்திற்கு மிரட்டல் அழைப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

மேலும் நடிகர் சித்தார்த்தின் தொலைப்பேசி எண்ணை தமிழக பாஜகவினர் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சித்தார்த்  தனது ட்வீட்டர் பதிவில்:கொரோனாவையே தாங்கி விட்டோம் இதை தாங்க மாட்டோமா என  தெரிவித்துள்ளார்.

மேலும், தனது பதிவில். எனக்கு இதுவரை 24 மணி நேரத்தில் 500 மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளது. எனக்கும் என் குடும்பத்தினருக்கும் கற்பழிப்பு மற்றும் கொலை மிரட்டல்கள் வந்துள்ளன.

அனைத்து அழைப்புகளையும் பதிவு செய்து காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நான் பேசாமல் இருக்க மாட்டேன். நீங்கள் முயற்சி செய்து கொண்டே இருங்கள். என சித்தார்த் பதிவிட்டுள்ளார். 

இந்த நிலையில், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சித்தார்த் அவதூறாக பேசியதாக சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பாஜக நிர்வாகி ஒருவர் புகார் அளித்துள்ளார்.