வாய்ப்புக்காக என்னை விற்கனுமா? அந்த விஷயம் இயற்கையா இருக்கனும் - ரெஜினா ஒபன்டாக்!

Regina Cassandra Tamil Cinema Actress
By Swetha Nov 14, 2024 08:30 AM GMT
Report

வாய்ப்புக்காக என்னை விற்க முடியாது என்று நடிகை ரெஜினா காசண்ட்ரா பேட்டியில் பேசியுள்ளார்.

ரெஜினா கசாண்ட்ரா

9 வயதிலிருந்தே தொகுப்பாளினியாக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் ரெஜினா கசாண்ட்ரா. இவர் பல குறும்படங்களிலும் நடித்துள்ளார். தொடர்ந்து, தமிழ், கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

வாய்ப்புக்காக என்னை விற்கனுமா? அந்த விஷயம் இயற்கையா இருக்கனும் - ரெஜினா ஒபன்டாக்! | Will Not Sell Me For Work Says Regina Cassandra

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படம் மூலம் பிரபலமானார். தற்போது கருங்காப்பியம், சூர்ப்பனகை, பிளாஷ் பேக், பார்டர் என தமிழில் மட்டும் 4 படங்களை கையில் வைத்துக்கொண்டு பிஸியாக நடித்து வருகிறார்.

இவர் பிரபல ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் தென்னிந்திய சினிமா மற்றும் பாலிவுட் சினிமா இடையே இருக்கும் ஒற்றுமை குறித்து பேசியுள்ளார். அத்துடன் ஒரு நடிகை பாலிவுட்டில் அடியெடுத்து வைக்க என்னென்ன சவால்களை சந்திக்கூடும் என்றும் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் பேசியதாவது, பாலிவுட்டில் நடிக்க வேண்டுமென்றால் இந்தி நன்கு தெரிந்திருக்க வேண்டும். நான் பள்ளி படிக்கும்போதே அம்மாவின் தூண்டுதலின் பேரில் இந்தி கற்றேன். அது நன்கு எனக்கு உதவியது.

இந்த ஹீரோவுடன் காதலில் ரெஜினா கசாண்ட்ரா - கோலிவுட்டின் அடுத்த ஜோடி!

இந்த ஹீரோவுடன் காதலில் ரெஜினா கசாண்ட்ரா - கோலிவுட்டின் அடுத்த ஜோடி!

ஒபன்டாக்

தென் இந்தியாவை சேர்ந்த பல நடிகைகள் மொழி பிரச்னை காரணமாக பாலிவுட்டில் சான்ஸ் கிடைப்பதில் சிரமம் அடைகிறார்கள். இப்போது தென்னிந்திய சினிமாக்களின் மார்கெட்டிலும் டேலண்ட் மேனேஜ்மென்ட் ஏஜென்சிகள் நுழைந்துள்ளன. பாலிவுட் சினிமாக்களில் போட்டி அதிகம்.

வாய்ப்புக்காக என்னை விற்கனுமா? அந்த விஷயம் இயற்கையா இருக்கனும் - ரெஜினா ஒபன்டாக்! | Will Not Sell Me For Work Says Regina Cassandra

என்னைப் பொறுத்தவரை, ஒரு வேலைக்காக, கேரியருக்காக என்னை விற்கக்கூடிய நபர் அல்ல. எந்த காரணத்துக்காகவும் என்னால் பேரம் பேச முடியாது. என்னால் லாபி செய்ய முடியாது. ஆனால், இதைச் செய்யாவிட்டால் எனக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்காது என்பதும் எனக்கு புரியும்.

எனது போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது நான் ஆக்ரோஷமாக இல்லை என்று நிறைய பேர் கூறியுள்ளனர். இது எளிதான அல்லது கடினமான விஷயம் அல்ல. ஆனால் சில விஷயங்கள் கட்டாயம் என எனக்கு உணர்த்தப்படுகிறது.

வாழ்க்கை இயற்கையாக இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால், எந்த அர்த்தமும் இல்லை. இப்போது எனக்காக பரப்புரை செய்யும் ஒரு குழு உள்ளது. நான் ஆடிஷன்களுக்கு தான் செல்கிறேன். இதை செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.