நடிகர் சங்க தேர்தலில் வெற்றி - விரைவில் பாண்டவர் அணி செய்யப்போகும் செயல்
விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க உள்ளதாக நடிகர் சங்க தேர்தலில் பொருளாளர் பதவிக்கு போட்டியிட்டு வென்ற நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் அனைத்தும் நீதிமன்ற தடை காரணமாக 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த நிலையில் நேற்று எண்ணப்பட்டன.
இந்த தேர்தலில் பொதுச்செயலளார் பதவிக்கு போட்டியிட்ட விஷால், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தி, தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர், துணைத்தலைவர்களாக பூச்சி முருகன், கருணாஸ் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்த வெற்றிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி, “ 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை நடிகர் சங்க வரலாற்றில் முக்கியமான நாட்கள். சொந்த வாழ்க்கையை, நேரத்தை தியாகம் செய்து உழைத்தார்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது.இப்போது கிடைத்துள்ள வெற்றி 2 வருட சட்ட போராட்டத்திற்கு பிறகு கிடைத்துள்ளது. நடிகர் சங்கக் கட்டிடம் முடிவுற்று அதிலிருந்து வரும் வரும் வருமானம் தான் எதிர்கால சந்ததிக்கு உதவப்போகிறது.
மேலும் கண்டிப்பாக. ஒவ்வொரு தேர்தல் வெற்றிக்கு பின்னும் முதலமைச்சரை சந்திப்பது மரபு என்பதால் விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க உள்ளதாக கார்த்தி தெரிவித்துள்ளார்.