MI vs RCB - வரலாற்று சாதனை படைப்பாரா விராட் கோலி?
ஐபிஎல் தொடரின் 20வது லீக் போட்டி இன்று இரவு 7;30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.
MI vs RCB
இந்த போட்டியில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகிறது.
5 முறை சாம்பியனான மும்பை அணி, இதுவரை 4 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்று 3 தோல்வியுடன் புள்ளிப் பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.
அதேவேளையில் 3 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி ஒரு தோல்வியுடன் பெங்களூரு அணி புள்ளிப் பட்டியலில் 3 வது இடத்தில் உள்ளது.
இரு அணிகளும் இதுவரை 33 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியதில், 19 போட்டிகளில் மும்பையும், 14போட்டிகளில் பெங்களூருவும் வெற்றி பெற்றுள்ளன.
மும்பையை அதன் சொந்த மைதானத்தில், பெங்களூரு அணி வீழ்த்தி 10 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில், அந்த சோகத்தை முடிவுக்கு கொண்டு வரும் முனைப்பில் பெங்களூரு உள்ளது.
காயம் காரணமாக இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்காமல் இருந்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, இந்த போட்டியில் அணியில் இணைவது மும்பைக்கு கூடுதல் பலம் அளிக்கும்.
சாதனை படைப்பாரா கோலி?
மேலும், இந்த போட்டியில் விராட் கோலி 17 ரன்கள் அடிப்பதன் மூலம் , சர்வேதேச T20 போட்டியில் 13,000 ரன்கள் குவித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைக்க உள்ளார்.
2007 ஆம் ஆண்டு முதன்முதலில் டெல்லி அணிக்காக டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட், ஐபிஎல் தொடர், உள்நாட்டு டி20 கிரிக்கெட்என 402 டி20 போட்டிகளில் விளையாடி 12,983 ரன்களை குவித்துள்ளார்.
மேலும், T20 போட்டியில் 13,000 ரன்கள் குவித்த 5வது சர்வதேச வீரர் என்ற பெருமையை பெறுவார். வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
அடுத்த இடங்களில் இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ், பாகிஸ்தானின் சோயிப் மாலிக், வெஸ்ட் இண்டீசின் பொல்லார்ட் உள்ளனர்.
ரோஹித்கு உள்ள வாய்ப்பு
கோலி 96 ரன்களை எடுத்தால், மும்பை அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற மற்றொரு சாதனையையும் படைப்பார்.
டெல்லி கேப்டன் கே.எல்.ராகுல் மும்பைக்கு எதிராக 950 ரன்களை குவித்து, இந்த சாதனையை தன்வசம் வைத்துள்ளார்.
ரோஹித் சர்மா, இந்த போட்டியில் 69 ரன்கள் குவிக்கும் பட்சத்தில், பெங்களூர் அணிக்கு எதிராக 900 ரன்கள் குவித்த முதல் வீரர் என்ற பெருமையை பெறுவார்.
தற்போது ரோஹித் ஷர்மா இதுவரை பெங்களூருவுக்கு எதிராக 831 ரன்கள் குவித்துள்ளார். டோனி 894 ரன்களுடனும், வார்னர் 862 ரன்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.