கேப்டன் பதவியில் இருந்து விலகியதால் ஜடேஜா ஐபிஎல் போட்டியில் இருந்து விலகலா? - ரவி சாஸ்திரி பதில் என்ன?
ஜடேஜாவுக்கும் கேப்டன் பதவிக்கும் சம்பந்தமே இல்லை என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
காயம் காரணமாக இந்தாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து ரவீந்திர ஜடேஜா விலகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் பல ஆண்டுகளாக சென்னை அணியின் கேப்டனாக இருந்து வந்த மகேந்திர சிங் தோனி விலகியதால், புதிய கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டார்.
ஆனால் கேப்டனாக பதவியேற்றதன் முதல் சென்னை அணி தொடர் தோல்விகளை சந்தித்ததை தொடர்ந்து, தனது விளையாட்டில் கவனம் செலுத்தப் போவதாக கூறி மீண்டும் கேப்டன் பதவியை தோனியிடம் ஒப்படைத்தார் ஜடேஜா.
இந்நிலையில் தற்போது தொடரில் இருந்தே விலகும் முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காயம் காரணமாக தொடரிலிருந்து விலகும் முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜடேஜா விலகல் குறித்து விளக்கம் அளித்துள்ள இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, “ஜடேஜா இயற்கையாகவே கேப்டன் கிடையாது,
அவர் எந்த ஒரு போட்டியிலும் கேப்டன் பணி செய்தது கிடையாது, அதனால் அவரிடம் கேப்டன் பதவியை கொடுத்தது சற்று கடினமான ஒன்றுதான், மக்கள் அனைவரும் ஜடேஜா சிறப்பாக செயல்படுவார் என்று நினைத்தனர் ஆனால் இது ஜடேஜாவின் தவறு கிடையாது,
அவர் கேப்டன் பணியை செய்ததே கிடையாது. அவருடைய நிலையை பார்க்கும் பொழுது தண்ணீரிலிருந்து வெளியே விழுந்த மீன்போல உள்ளது,
அவர் ஒரு வீரராக சிறப்பாக செயல் படலாம் ஆனால் ஒரு கேப்டனாக முடியாது இதனால் அவர் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்தவும்,
ஒருவர் சதம் அடிக்கிறார் அல்லது சிறப்பாக செயல்படுகிறார் என்பதற்காக மட்டுமே அவரை அணியின் கேப்டனாக்க முடியாது,
கேப்டன் ஆக வேண்டும் என்றால் அதற்கு அணியை புரிந்துகொண்டு அணியின் வீரர்களை புரிந்துகொண்டு சூழ்நிலைக்கு தகுந்தார் போல் முடிவெடுக்க தெரிந்தவரே ஒரு நல்ல கேப்டனாக முடியும், என்று ரவி சாஸ்திரி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.