என்னது.. ஹர்திக் பாண்டியாவுக்கு மீண்டும் திருமணமா...? ஷாக்கான ரசிகர்கள்...!
ஹர்திக் பாண்டியா மீண்டும் திருமணம் செய்யப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஹர்திக் பாண்டியா
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் வலம் வருபவர் ஹர்திக் பாண்டியா. இவர் சமீபத்தில் தனது 29-வது பிறந்தநாளை கொண்டாடினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, துபாயில் தன் நெருங்கிய நண்பர் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்ட விழாவிற்கு எம்.எஸ்.தோனி மற்றும் ஹர்திக் பாண்டியாவுடன் கலந்து கொண்டார்.
அந்த விழாவில், ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்து எம்.எஸ். தோனி மாஸாக நடனமாடினார். அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி ரசிகர்களின் அமோக லைக்குகளை பெற்றது.
ஹர்திக் பாண்டியா, நியூஸிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் அணியை தலைமை தாங்கி வெற்றியும் தேடிக்கொடுத்தார். இவரது தலைமையில் இந்திய அணி தொடர் வெற்றிகளை பெற்று வருகிறது.
ஹர்திக் பாண்டியாவுக்கு மீண்டும் திருமணமா...?
கிரிக்கெட் வீரர் பாண்டியா, பாலிவுட் நடிகை நடாஷா ஸ்டான்கோவிச்சை மும்பை நீதிமன்றத்தில் 2020ம் ஆண்டு மே 31ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு அகஸ்தியா என்ற ஆண் குழந்தை பிறந்தது.
தற்போது ஹர்திக் பாண்டியா மீண்டும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை ஹர்திக் பாண்டியவும், நடாஷா காதல் தினத்தை முன்னிட்டு மீண்டும் திருமணம் செய்ய உள்ளனர்.
இவர்கள் உதய்பூரில் திருமணத்தை கொண்டாட விரும்புவதாக இருவரின் நெருங்கிய வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது. இவர்கள் நீதிமன்றத்தில் திருமணம் செய்து கொண்டதால் நட்சத்திர ஜோடி பிரமாண்டமான திருமண கொண்டாட்டம் எதுவும் நடத்தவில்லை.
இதனையடுத்து. தங்கள் காதலை ஆடம்பரமான திருமண விழாவுடன் கொண்டாட முடிவு செய்துள்ளனர்.
இந்த திருமண விழா இன்று தொடங்கி 16ம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்திருமண விழாவில், ஹல்தி, மெஹந்தி மற்றும் சங்கீத் போன்ற திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் மிகவும் உற்சாகமாக நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.