11 இடங்கள் மட்டும் தான் அளிப்பேன் - கட் அண்ட் ரெயிட்டாக சொன்ன அகிலேஷ் யாதவ்..!
வரும் நாடாளுமன்ற தேர்தல் இந்தியா கூட்டணிக்கு பெரும் சவாலான ஒன்றாக மாறிவருகின்றது.
இந்தியா கூட்டணி
பாஜகவை எதிர்க்க, மாநிலத்திலுள்ள எதிர்கட்சிகளை ஒன்றிணைத்து வலுவான எதிர்க்கட்சியை அமைக்கும் முயற்சியில் இறங்கி அதில் வெற்றியும் பெற்றுள்ளன எதிர்க்கட்சிகள்.
காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், ஆம் ஆத்மீ, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, உத்தவ் தாக்ரேவின் சிவசேனா, சமாஜ்வாதி என பல கட்சிகள் இந்த கூட்டணிக்குள் இடம்பெற்றன.
உரசல்
ஆனால், தொகுதி பங்கீடு என வரும் போது ஆங்காங்கே காங்கிரஸ் கட்சியுடன் உடன்பாடு செய்து கொள்ள பிறகட்சிகள் எதிர்ப்புகளை தெரிவிக்கின்றன.
மேற்குவங்காளத்தில் மம்தா பானர்ஜீயின் திரிணாமுல் காங்கிரஸ், பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மீ கட்சிகள் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று அதிரடியாக அறிவித்துள்ளன.
11 இடங்களே
இந்த சூழலில் தான் மிக பெரிய மாநிலமான உத்திரபிரதேசத்தில் இருந்தும் தற்போது காங்கிரஸ் கட்சிக்கு சிறு எதிர்ப்பை சமாஜ்வாதி கட்சி தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சி வலுவாக உள்ள 11 தொகுதிகளை மட்டுமே அக்கட்சிக்கு அளிக்க முடியும் என்று தெரிவித்துள்ள அகிலேஷ் யாதவ், தொகுதிகளை பெற்றுக்கொண்டு காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணியின் வெற்றிக்காக ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.