பெயரை இப்படி மாற்றுங்கள்...ஒரே கண்டிஷன்தான்..1 பில்லியன் டாலர் தருகிறேன்!! எலோன் மஸ்க் கிண்டல் !!

Elon Musk
By Karthick Oct 24, 2023 04:23 AM GMT
Report

வினோத கண்டிஷனுடன் பெயரை மாற்றினால் ஒரு பில்லியன் டாலர் தருவதாக மஸ்க் பதிவிட்டுள்ளது தற்போது வைரலாகி வருகின்றது.

மஸ்க் சேட்டை

ட்விட்டராக இருந்து தற்போது எக்ஸ் என பெயர் மாற்றம் பெற்றுள்ள தளத்தின் உரிமையாளர் எலோன் மஸ்க் அவ்வப்போது வினோதமான செயலகளில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்துகின்றார்.

பெயரை இப்படி மாற்றுங்கள்...ஒரே கண்டிஷன்தான்..1 பில்லியன் டாலர் தருகிறேன்!! எலோன் மஸ்க் கிண்டல் !! | Will Give 1 Billion Change Wikipedia To Dikipedia

அவ்வாறு அவர் தற்போது செய்தது தான் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது. எக்ஸ் தளத்தில் எலோன் மஸ்க் வெளியிட்டுருந்த பதிவில், பிரபல தகவல் நிறுவனமான "விக்கிபீடியா"வின் பெயரை மாற்றினால் ஒரு பில்லியன் டாலர் தருகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பில்லியன் டாலர் என்றால் அனைவருமே இதற்க்கு சம்மதிப்பார்கள் என்று தானே நீங்கள் எண்ணுகுறீர்கள் - அங்கு தான் எலோன் மஸ்க் தனது தந்திரத்தை காண்பித்துள்ளார். 

அதாவது விக்கிபீடியா என்பதை டிக்கிபீடியா என மாற்றவேண்டும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு ஒரே ஒரு கண்டிஷனும் அவர் வைத்துள்ளார். அதாவது இந்த பெயர் மாற்றத்தை ஒரு வருடத்திற்கு செய்தால் தான் சொன்ன பணத்தை தருவதாக எலோன் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.