பாலா மீது கேஸ் போடப்போறேன்.. என்னை டேமேஜ் செஞ்சிட்டாரு - சிவக்குமார் ஆதங்கம்!
பாலா மீது கேஸ் போடப்போவதாக சிவக்குமார் ஆதங்கமாக கூறியுள்ளார்.
பாலா
பாலாவின் இயக்கத்தில் வணங்கான் படம் தயாராகியுள்ளது. இந்தப் படத்தில் முதலில் நடிக்க ஒப்பந்தம் ஆகி, அதன் பின்னர் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டவர் நடிகர் சூர்யா. பிறகு, சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையே சில கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், சூர்யா வணங்கான் படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்த படத்தில் சூர்யாவிற்கு பின்பு அருண் விஜய் கமிட் ஆனார். விரைவில் படம் ரிலீஸாக உள்ளது. வணங்கான் படத்தின் இசை வெளியீட்டு விழாவும், பாலா 25 விழாவும் அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சூர்யா, அவரது தந்தை சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பாலா 25 நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சிவக்குமார், பாலாவை பேட்டி எடுத்தார். அப்போது பாலாவிடம் சிவக்குமார் எழுப்பிய பல கேள்விகள் கவனம் பெற்றது. அதாவது சிவக்குமார் கேட்கும்போது, " நான் 1972இல் காரைக்கால் அம்மையார் என்ற படத்தில் நடித்தேன்.
அந்தப் படத்தினை ஏ.பி. நாகராஜன் எடுத்தார். அந்தப் படத்தில் காரைக்கால் அம்மையாராக கே.பி. சுந்தராம்பாள் அம்மையார் நடித்தார். கண்ணதாசன் பாடல் எழுதி, அந்த அம்மையார் பாடி, நானும் ஸ்ரீவித்யாவும் ஆடிய பாடல் அசாத்தியமான பாடல்.
சிவக்குமார்
இன்றைக்கும் இணையத்தில் ' தக தக தக வென ஆடவா' எனத் தேடினால் அந்தப் பாடல் வந்துவிடும். அந்தப் பாடலில் நான் உயிரைக் கொடுத்து ஆடியுள்ளேன். ஆனால் பிதாமகன் படத்தில் அந்த பாடலுக்கு சூர்யாவையும், சிம்ரனையும் ஆடவைத்து கிண்டல் செய்துவிட்டார் பாலா.
உண்மையைச் சொல்லுங்கள் பாலா, நையாண்டிக்காக அதைச் செய்தீர்களா? என்னை மானபங்கம் செய்யவேண்டும் என அதைச் செய்தீர்களா? என சிவக்குமார் கேட்டார். அதற்கு பாலா, பார்க்கவே உங்களது ஆட்டமும், உடன் ஆடும் மற்றவர்களின் ஆட்டமும் நகைச்சுவையாக இருந்தது' எனக் கூறினார்.
இதனால் அரங்கமே கைதட்டிச் சிரித்தது. இதைக் கேட்ட சிவக்குமார், அடப்பாவி, உலகம் முழுவதும் கொண்டாடிய அந்த நடனம் நகைச்சுவையாக இருந்துச்சா? உன்மீது கேஸ் போடப்போகின்றேன். என்னையா இப்படிச் சொல்லுறான்? என சிவக்குமார் சிரித்தபடியே கூறினார். இந்த நிகழ்வு தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.