அதிமுக பொதுச்செயலாளர் குறிவைக்கும் கட்சிகள்..ஒர்க் அவுட்டாகுமா திட்டம்..?
வரும் நாடாளுமன்ற தேர்தல் என்பது அதிமுகவிற்கு சற்று சவாலான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
கூட்டணி கணக்கு
அதற்கு முக்கிய காரணமாக, அக்கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியதே. ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு, 2019-இல் ஒன்றிணைந்த அதிமுகவாக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருந்த போது, பாஜகவின் கூட்டணியில் இணைத்து பிறகு 2021-ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலையும் கூட்டணியிலேயே சந்தித்தது.
அதிமுகவால் பாஜகவிற்கு பலமா..? பாஜகவால் அதிமுகவிற்கு பலமா..? என்பது மக்களே அறிந்த ஒன்று என்ற காரணத்தால், தற்போது கூட்டணி உடைந்துள்ளது யாருக்கு பின்னடைவு என்பதும் தெரிந்த ஒன்றே. ஆனால், இங்கு அதிமுகவின் பக்கம் ஒரு கேள்வி இருக்கின்றது.எடப்பாடி பழனிசாமி தன்னை ஒற்றை தலைமையாக நிரூபிக்கும் நெருக்கடியில் இருக்கின்றார்.
பாஜகவால் அதிமுகவிற்கு சிறுபான்மையின மக்களின் வாக்குகள் நழுவின என்ற பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள எடப்பாடி பழனிசாமி, தனது தலைமையிலான அதிமுகவை எந்த வித பின்னடைவும் இன்றி தற்போது கொண்டு செல்லும் முன்னைப்பில் மிக தீவிரம் காட்டி வருகின்றார்.
திட்டம்..?
அவருடைய முழு கவனமும் தற்போது, புது கூட்டணியை அமைப்பதிலேயே இருக்கும். பெரிய வாக்குவங்கி உடைய கட்சி என்றாலும், தேர்தல் நேரத்தில் சிறு கட்சிகளின் உதவியும் தேவை தான். அதனை நோக்கி தான் தற்போது எடப்பாடி பயணித்து கொண்டிருக்கிறார். அண்மைக்காலங்களில், பாஜகவையும் விமர்சிக்க துவங்கியுள்ள அதிமுகவின் முன்னணி தலைவர்களும் கூட்டணி குறித்த சிந்தனையில் தான் ஆழ்ந்திருப்பார்கள்.
அந்த சிந்தனையின் வெளிப்பாடு தான், அதிமுக முக்கிய தலைவர் ஜெயக்குமார், காங்கிரஸ் கட்சியின் கூட்டணிக்கு தங்கள் கட்சியின் கதவு எப்போதும் திறந்தே இருக்கும் என்றதும், தமிழகத்தில் இரட்டை இலை துளிர்விட்டு இருக்கும் இந்த நேரத்தில் தாமரை மலர வாய்ப்பே இல்லை என்றதும் என்றே எடுத்துக்கொள்ளலாம்.
இதற்கிடையில் தான் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சி நிர்வாகிகளிடத்தில் கண்டிப்பாக திமுக, பாஜக கட்சிகளை தவிர பிற கட்சிகளை விமர்சிக்க கூடாது என்று தெரிவித்துள்ளார் என்ற செய்திகள் உலா வருகின்றார்.