திமுக - அதிமுக கூட்டணி நியாயமானவை- டிடிவி தினகரன் பதில்
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பல்வேறு அரசியல் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அவர் பேசியதாவது..,
பாஜகவை எதிர்ப்பதற்காக தவெகவும் திமுகவும் ஒரே அணியில் வர வேண்டும் என்ற திருமாவளவனின் கருத்தை அரசியல் கருத்தாகவே பார்க்கிறேன் என்றார்.
திமுக - அதிமுக கூட்டணி சாத்தியமா என்ற கேள்விக்கு அரசியல் சூழ்நிலை யாரை வேண்டுமானாலும் ஒன்றிணைக்கும் என்று கூறினார்.

இதுபோன்ற நிகழ்வுகள் கடந்த காலங்களிலும் நடந்துள்ளதாகவும், அண்ணாவும் ராஜாஜியும் இணைந்தது அதற்கு உதாரணம் என்றும் தெரிவித்தார்.
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை தன் பக்கம் இழுத்து அமைச்சரவையில் இடமளித்து தவெக கூட்டணியில் வைத்துக்கொள்வது நியாயம் என்றால், மற்ற கூட்டணிகளும் நியாயமானவையே என்றார்.
மேலும், இந்தத் தேர்தலில் தவெக வெற்றி பெற்றதை வலுவான அரசியல் சக்தியாக கருதினால், அவரை எதிர்கொள்ள மற்ற கட்சிகள் வியூகம் வகுப்பதில் எந்தத் தவறும் இல்லை என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.