காவிரி பிரச்சனைக்காக உயிரையும் கொடுப்பேன்...புனீத் ராஜ்குமார் சகோதரர் பகிர்
அதிகரித்து வரும் தமிழக கர்நாடக காவிரி பிரச்சனை அதிகரித்து வரும் சூழலில், அது குறித்து கர்நாடக நடிகர்களின் கருத்துக்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
காவிரி விவகாரம்
இன்று நேற்று துவங்கிய பிரச்சனையல்ல - தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் தொடர்ந்து காவிரி நதிநீர் பங்கீட்டில் பிரச்சனை தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது. ஒவ்வொரு முறையும் தமிழக அரசு இந்த விவகாரத்தில் மத்திய அரசையும், உச்சநீதிமன்றத்தையும் நாடி தமிழகத்திற்கான தண்ணீரை பெற்று வருகின்றது.
இம்முறையும், கர்நாடக அரசு காவிரி நதிநீர் ஆணையத்தின் படி நடக்கலாம், தண்ணீர் திறக்க மறுத்து வரும் சூழலில், நேற்று உச்சநீதிமன்றம் அதிரடியாக, கர்நாடக அரசு காவிரி நதிநீர் ஆணையத்தின் வழிகாட்டுதலை ஏற்கவேண்டும் என தெரிவித்திருந்தது.
இதனை தொடர்ந்து கர்நாடகாவில் விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகள் போர்க்கொடி தூக்கி பிரச்சனை செய்து வரும் நிலையில், அம்மாநிலத்தின் முக்கிய நடிகராக பார்க்கப்படும் ராகவேந்திரா ராஜ்குமாரின் கருத்துக்கள் தற்போது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ராகவேந்திரா ராஜ்குமார் கருத்து
செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் இது குறித்து கேள்வி கேட்கப்பட்ட போது, ‛‛தன் தந்தை இருந்தபோது தங்களிடம் ஒரு சக்தி இருந்தது என கூறிய அவர், இப்போது அந்த சக்தி இல்லை என்றும் இதற்காக தாங்கள் சும்மா இருந்துவிட முடியாது என கூறினார்.
நம் மக்களுக்கும், நம் நிலம், மொழி, நீருக்கும் பிரச்சனை இருந்தால் தங்களின் குடும்பமும், சினிமாத்துறையும் வந்து நிற்கும் என உறுதிபட தெரிவித்த ராகவேந்திரா ராஜ்குமார், இந்த விஷயத்தில் தான் தனிப்பட்ட முறையில் ஏதாவது கூற வேண்டும் என்றால் காவிரி என்பது உயிர் வாழ்வதற்கான பிரச்சனை என கூறி தான் கடந்த 10 ஆண்டுகளாக கஷ்டப்பட்டு வாழ்கிறேன் என கூறி, ஒருவேளை தன் உயிர் மூலம் காவிரிக்கு நல்லது நடக்கும் என்றாலும் தான் அதனை கொடுத்துவிட்டு செல்ல தயாராக இருக்கிறேன் என கூறினார்.
இது தனது தனிப்பட்ட கருத்து. தான் அதிருப்தியில் கூறவில்லை என தெரிவித்து ஏனென்றால் சும்மா போகும் உயிர் தண்ணீருக்காக போகட்டுமே என்பதால் இதை கூறுகிறேன், ஏனென்றால் அந்த அளவுக்கும் தானும், தன் குடும்பமும் அனைத்துக்கும் தயாராக இருக்கிறோம் என்றார்.