கை போனதா விட லைசென்ஸ் போனது தான் வருத்தம்!! ஆனாலும் வண்டி ஓட்டுவேன்!! TTF அதிரடி
சிறையில் இருந்த யூடியூபர் TTF வாசன் அண்மையில் ஜாமீன் பெற்று வெளிவந்துள்ளார்.
TTF வாசன்
பிரபல பைக் ரைடரான டிடிஎஃப் வாசன் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். ஊர் ஊராக விலை உயர்ந்த பைக்குகளில் பயணம் செய்து அந்த அனுபவங்களை Twin Throttlers என்ற யூடியூப் சேனலில் பதிவேற்றி வெளியிட்டு வந்தார். அதிவேகமாக பைக்கை ஓட்டி தற்போதையை இளைஞர்களை அதிகமாக கவர்ந்துள்ள இவர், விரைவில் மஞ்சள் வீரன் என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாவுள்ளார்.

தொடர்ந்து பைக் சாகசம் செய்து வரும் இவர் அவ்வப்போது அதன் காரணமாக சர்ச்சைகளிலும் சிக்கி வருகின்றார். கைது செய்த போலீஸ் இந்நிலையில் தான் தற்போது இவர், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரத்தின் பாலுசெட்டி சாத்திரம் அருகே பைக்கில் சென்றபோது சாகசம் செய்ய முயன்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கினார்.
இந்த விபத்தில் இவருக்கு கை எலும்பு முறிந்துள்ள நிலையில், காஞ்சிபுரம் மருத்துவமனையில் அளிக்கப்பட்டு பின்னர், அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நீட்டிக்கப்ட்ட நீதிமன்ற காவல்
இந்த விபத்து குறித்தான வீடியோ ஒன்றும் சமுகவலைதளப்பக்கத்தில் வெளியாக இது குறித்து பாலுசெட்டி சாத்திரம் காவல் துறையினர், மனித உயிருக்கு ஆபத்து உண்டாக்குவது, பிறருடைய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பது என இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

அதனை தொடர்ந்து கடந்த செப்டம்பர் 19-ஆம் தேதி காலை அவர் கைது செய்யப்பட்டார்.இந்த கைதை எதிர்த்து வாசன் தரப்பில் இரண்டு முறை ஜாமீன் பெற மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
மறுபடியும் வண்டி ஓட்டுவேன்
ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்ட நிலையில், இன்று அவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. கடந்த 40 நாட்களுக்கு மேலாக விதிமீறல் வழக்கில் கைதாகி சிறையில் இருந்து வந்த TTF வாசனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை அவரது ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

தற்போது சென்னை புழல் சிறையில் இருந்து வெளிவந்துள்ள TTF வாசன் செய்தியாளர்களை சந்தித்த போது, விபத்தில் கை போனதை விட லைசென்ஸ் மனம் போனது தான் வருத்தம் என கூறிய அவர், கண்கலங்கினேன் என்று கூறி இருப்பினும் வண்டி ஓட்டுவேன் சர்வதேச லைசென்ஸ் இருக்கிறது என்று கூறினார்.
நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட பிள்ளையான்...! அநுர தொடர்பில் ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்து IBC Tamil