298 இடங்களில் மட்டுமே போட்டியிடும் காங்கிரஸ் - இலக்கு கைகூடுமா?

Indian National Congress Lok Sabha Election 2024
By Karthick Apr 15, 2024 09:03 PM GMT
Report

நடைபெறும் மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெரும் என காங்கிரஸ் மட்டும் கூட்டணி கட்சிகள் பெரிதாக நம்பிக்கை வைத்துள்ளனர்.

காங்கிரஸ்

நாட்டில் பெரும் ஆதிக்கம் செலுத்திய கட்சியாக இருந்த காங்கிரஸ் தற்போது பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றது. அக்கட்சி கடந்த தேர்தலில் வெறும் 30 இடங்களை மட்டுமே கைப்பற்றி பெரும் தோல்வியை சந்தித்தது.

will-congress-win-with-just-minimal-seats

கடந்த 2 தேர்தல்களில் பெற்ற தோல்வியை இம்முறை எப்படியும் சரிசெய்திட வேண்டும் என்ற முனைப்பில் தீவிரம் காட்டி வருகின்றது காங்கிரஸ். பாஜகவிற்கு எதிராக மாநிலங்களில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வரும் கட்சிகளை ஒன்றிணைத்து இந்தியா என்ற கூட்டணியை மக்களவை தேர்தலுக்காக ஒன்று சேர்த்துள்ளது காங்கிரஸ்.

will-congress-win-with-just-minimal-seats

இந்த கூட்டணியில் சில இடங்களில் முரண்பாடுகளும், பிரதமர் வேட்பாளர் இன்றி தேர்தலை சந்திக்கும் இக்கூட்டணி 10 ஆண்டுகால பாஜகவின் ஆட்சியை முடிக்கும் நோக்கில் தேர்தல் பிரச்சாரகளத்தில் தீவிரம் காட்டி வருகின்றது.

இலக்கு கைகூடுமா? 

மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில் ஆட்சி அமைக்க தேவைப்படும் பெரும்பான்மை 272 இடங்கள் தேவைப்படுகிறது. கூட்டணியாகவோ, தனித்தோ ஒரு கட்சி இந்த இடத்தை ஈட்டும் பட்சத்தில் ஆட்சி அமைக்கும்.

will-congress-win-with-just-minimal-seats

ஆனால், காங்கிரஸ் வரும் மக்களவை தேர்தலில் மொத்தமாகவே நாடு முழுவதும் 298 இடங்களில் தான் போட்டியிடுகிறது. இதில் 272 இடங்களை அக்கட்சி பெறுமா என்பது கேள்விக்குறியே..?

will-congress-win-with-just-minimal-seats

கூட்டணியுடன் தான் காங்கிரஸ் மத்தியில் ஆட்சியை அமைக்கும் என நம்பப்படும் நிலையில், ஏற்கனவே மேற்குவங்க திரிணாமுல் காங்கிரஸ், கேரளா இடதுசாரி, ஆம் ஆத்மீ போன்ற கட்சிகளுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் சுமுகமான உறவு இல்லாதது வெளிப்பட்டுள்ளது.

will-congress-win-with-just-minimal-seats

5 ஆண்டு ஆட்சிக்கு கட்சிகளின் கூட்டணி அவசியம் என்றிருக்கும் சூழலில், காங்கிரஸ் கட்சிக்கு தற்போது முன்னிருப்பது பெரும் சவாலான ஒன்றே. தேர்தல் மட்டுமின்றி தேர்தலுக்கு பிந்தைய நேரமும் காங்கிரஸ் கட்சி பெரிய சவாலை எதிர்கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை.