1993-ஆம் ஆண்டிற்கு பிறகு - சாதிக்குமா காங்கிரஸ்..? ராஜஸ்தான் மாநில தேர்தல் நிலவரம்?
200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வரும் 3 -ஆம் தேதி வெளியிடப்பவுள்ளது.
ராஜஸ்தான்
ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் அசோக் கெலாட் ஆட்சியில் வழங்கப்பட்ட நலத்திட்டங்களை நம்பி உள்ளார்.அதே நேரத்தில் மறுமுனையில், பாஜக பிரதமர் நரேந்திர மோடியின் மத்திய ஆட்சியை நம்பி தேர்தலை சந்தித்துள்ளது.
கடந்த 1993 தேர்தல் முதல் ராஜஸ்தானில் எந்த ஒரு கட்சியும் தொடர்ந்து ஆட்சியை பிடித்ததில்லை. இது வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத நிலையாகும். இதன்படி, தான் தற்போது நடந்து முடிந்துள்ள தேர்தலில் பாஜகவின் ஆட்சி அமையும் என அக்கட்சி தொண்டர்கள் கூறுகின்றனர்.
காங்கிரஸ் vs பாஜக
காங்கிரஸ், பாஜகவை தவிர வேறு எந்த கட்சியும் அங்கு ஆட்சியை அமைத்தது இல்லை. 1993-ல் பாஜக வென்று பைராம்சிங் ஷெகாவாத் முதல்வரானார். இதன் பிறகு காங்கிரஸின் அசோக் கெலாட், மீண்டும் பாஜகவின் வசுந்தரா ராஜேவும் என மாறி, மாறி தான் ஆட்சியை பிடித்துள்ளனர்.
மீண்டும் ஆட்சியை பிடிப்போம் என காங்கிரஸ் நம்பிக்கை தெரிவிக்கும் நிலையில், இந்த பேச்சுக்கள் எல்லாம் இன்னும் இரண்டு நாட்களில் தெரிந்து விடும். ராஜஸ்தான் மாநிலம் வட இந்தியாவில் முக்கியமானது என்பதை காட்டிலும், வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு இந்த சட்டமன்ற தேர்தல் வெற்றி முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.