MI vs CSK : இன்றைய 33-வது லீக் போட்டியில் சென்னை அணி வெற்றி பெறுவது கடினம் தானாம் - ஏன் தெரியுமா?
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சென்னை அணி வெற்றி பெறுவது கடினம் என கூறப்படுகிறது.
நடப்பாண்டு ஐபிஎல் சீசனின் 33-வது லீக் போட்டியாக மும்பை டி.ஒய் பாட்டில் மைதானத்தில் மும்பை அணியும் சென்னை அணியும் மோதுகின்றன.
இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தான் ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய அவமானத்தை இரு அணிகளும் தவிர்க்க முடியும் என்ற சூழ்நிலை நிலவுகிறது.
4 முறை சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் இதுவரை நடைபெற்ற 6 போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
மறுபுறம் மும்பை இந்தியன்ஸ் இதுவரை ஆடிய 6 போட்டிகளில் அனைத்திலும் தோல்வி அடைந்துள்ளது. எனவே இன்றைய ஆட்டத்தில் இரு அணிகளில் எந்த அணி தோற்றாலும், ஐபிஎல் வரலாற்றில் பெரும் அவமானத்தை சந்திக்க கூடும்.
இந்நிலையில் இதில் மும்பை தான் வெற்றி பெறும் என கூறப்படுகிறது. இதற்கு காரணம சென்னை அணியை விட, மும்பை அணியின் ப்ளேயிங் 11 தற்போது நல்ல ஃபார்மில் உள்ளது என்பது தான்.
ஐபிஎல் வரலாற்றில், இரு அணிகளும் இதுவரை 32 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி, இதில் மும்பை அணி 19 போட்டிகளிலும், சென்னை அணி 13 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
கடைசி 5 போட்டியை கணக்கில் எடுத்தால் மும்பை அணி தான் அதிகபட்சமாக 3 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது. இதுவே சென்னை அணிக்கு பெரும் பதற்றத்தை கொடுக்கும் செய்தியாக பார்க்கப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க,மும்பைக்கு எதிராக சிஎஸ்கே ஆடியுள்ள முக்கியமான போட்டிகளில் எல்லாம் சென்னை அணி தோல்வியையே கண்டுள்ளது.
இன்று போட்டி நடைபெற இருக்கும் டி.ஒய் பாட்டில் மைதானத்தில் ஒரே ஒருமுறை மட்டுமே இரு அணிகளும் மோதியுள்ளன. இதில் சென்னை அணியின் ஆதிக்கம் தான் இருந்துள்ளது. இது மட்டுமே தற்போதைக்கு ரசிகர்களுக்கு ஆறுதல் தரக்கூடிய செய்தியாக உள்ளது.