தவெக ஆட்சியில் விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்கு ரத்தாகுமா?

TVK
By Fathima Sep 02, 2026 12:39 PM GMT
Report

தவெக ஆட்சியில் விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுமா என திமுக எம்எல்ஏ எம்ஆர்கே பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினார்.

முந்தைய ஆட்சியில் ஜனநாயக உரிமைகளுக்காக போராடிய ஆசிரியர்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் இன்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.

முந்தைய ஆட்சி, 110 விதியின் கீழ் என கூறியதற்கு திமுக எதிர்ப்பு தெரிவிக்கவே விதிக்கு புறம்பாக எதுவும் இல்லை என பேரவை தலைவர் தெரிவித்தார்.

தவெக ஆட்சியில் விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்கு ரத்தாகுமா? | Will Cases Filed Against Farmers Be Withdrawn

இந்நிலையில் திமுக எம்எல்ஏ எம்ஆர்கே பன்னீர்செல்வம், போராட்டம் செய்த விவசாயிகள் மீதான வழக்குகள் ரத்து என முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.

தவெக-வின் 100 நாள் ஆட்சியில் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யக்கோரி விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்படுமா?

அவர்களை கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்திருந்தார்கள், அந்த வழக்கையும் தள்ளுபடி செய்வீர்களா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட அதிகாரம் இருக்கிறது, அதனை மாற்றி வேறு வழியில் திருப்புவது சரியாக இருக்காது என பதிலளித்தார்.