''எனக்கு வெட்கமா இருக்கு , ஆள் இல்லாட்டி அந்தமானில் இருந்து ஆட்களை அழைத்து வந்திருப்பேன் '' - கொந்தளித்த ராமதாஸ்

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஆள் இல்லை என்றால் அந்தமானில் இருந்து 50 பேரை அழைத்து வந்திருப்பேன் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

பா.ம.க சார்பில் ஒருங்கிணைந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கடலூரில் இன்று (நவ.,25) நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பேசிய  ராமதாஸ்: 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. சிறப்பான வழக்கறிஞரை நியமனம் செய்துள்ளது.

எனவே, தடை உத்தரவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக கூறினார்.தொடர்ந்து கூட்டத்தில் பேசிய ராமதாஸ்  தமிழகத்தில் 3வது பெரிய கட்சியாக இருப்பது எனக்கு வெட்கமாக இருக்கிறது.

இந்த கட்சி இனி இளைஞர்களின் கைகளில் தான் இருக்கிறது. உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் போட்டியிட ஆள் இல்லை என்கின்றனர். ஆளில்ல என்றால் அந்தமானில் இருந்து 50 பேரை அழைத்து வந்திருப்பேன் என ராமதாஸ் பேசினார்.

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்