நீட் தேர்வினை நீக்க பாஜக ஆதரவு கொடுக்குமா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!
நீட் தேர்வினை முழுமையாக நீக்க பாஜக குரல் கொடுக்குமா என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டப் பேரவையில், ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்தின், நீட் தேர்வுக்கு ஒரு புறம் தயாராக சொல்லும் அரசு, மறுபுறும் விலக்கு கேட்பது ஏன் எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் கூறிய முதல்வர் ஸ்டாலின், நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெறவேண்டும் என்பது தான் திமுக, அதிமுகவின் நிலைப்பாடாக உள்ளது என தெரிவித்தார்.
மேலும், எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக, பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது ஆகவே தமிழகம் நீட் தேர்விற்கு விலக்கு கேட்கும்போது, அதற்கு பாஜக குரல் கொடுக்க தயாரா? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் கூறிய நயினார் நாகேந்திரன், சட்டத்திற்கு உட்பட்டு தேவைப்பட்டால் ஆதரவு கொடுப்போம் என கூறினார்.