ராமர் கோவில் போகிறார்களா..? அதிமுக ஜெயக்குமார் பதில்.!
வரும் 22-ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ராமர் கோவில்
மிக பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் அயோத்தி ராமர் கோவில் திறப்பு வரும் 22-ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.
நாட்டின் முக்கிய பிரமுகர்கள் பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் பிரதமர் மோடி இந்த கோவிலை திறந்து வைக்கவுள்ளார்.
அதிமுக பங்கேற்பா..?
இந்த நிகழ்வில் கலந்து கொள்ள அதிமுகவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் முக்கிய தலைவர் ஜெயக்குமாரிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அயோத்தி ராமர் கோவில் நிகழ்ச்சியில் அதிமுக கலந்து கொள்ளுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது உண்மை தான் என குறிப்பிட்டு, ஆனால், கலந்து கொள்வதும்.? கொள்ளாதது குறித்தும் கட்சி தலைமை தான் முடிவெடுக்கும் என தெரிவித்தார்.