ரஷ்யாவில் பரவும் காட்டுத்தீ: அணைக்க தொடரும் போராட்டம்
Russia
Wild fire
By Petchi Avudaiappan
ரஷ்யாவின் காட்டில் ஏற்பட்ட தீ பலத்த காற்று காரணமாக பல்வேறு பகுதிகளுக்கும் பரவி வருவது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
அங்குள்ள யகுதியா என்ற பகுதியில் நேற்று ஒரே நாளில் மட்டும் 22 இடங்களில் 4,500 ஹெக்டேர் வனப்பரப்பில் தீ பரவியதால் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கும் தீ பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் வீட்டின் கதவுகளை மூடிக்கொண்டு உள்ளேயே பாதுகாப்பாக இருக்கும் படி உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சி தீயை கட்டுப்படுத்த ரஷ்ய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. பருவ நிலை மாற்ற பிரச்சனையே காட்டுத்தீ ஏற்பட காரணம் என ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது.