காட்டுத்தீயை அணைக்கச் சென்ற ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளானது 8 பேர் உயிரிழப்பு

Turkey Wildfire Plane Crash
By Thahir Aug 15, 2021 09:45 AM GMT
Report

துருக்கியில் தரையிறங்கிய ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளாகி 8 நபர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கியில் காட்டுத்தீ பரவியுள்ளது. எனவே அதனை கட்டுப்படுத்த, ரஷ்யாவில் இருந்து பி-200 வகை தீயணைப்பு விமானம் அனுப்பப்பட்டிருக்கிறது.

அதில் ரஷ்யாவின் ராணுவத்தை சேர்ந்த விமானிகள் ஐந்து பேரும், துருக்கி நாட்டை சேர்ந்த நிபுணர்கள் மூன்று பேரும் பயணித்திருக்கிறார்கள். 

காட்டுத்தீயை அணைக்கச் சென்ற ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளானது 8 பேர் உயிரிழப்பு | Wildfire Plane Crash Turkey

இந்நிலையில், விமானம் துருக்கியின் அடானா மாகாணத்திற்கு அருகில் தரை இறங்கியுள்ளது.

அப்போது எதிர்பாராதவிதமாக விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த 8 நபர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர்.