வானிலை மாற்றத்தால் சிக்கலில் மாட்டிக்கொண்ட ஆஸ்திரேலியா - தவிக்கும் பொதுமக்கள்
ஆஸ்திரேலியாவில் நிலவி வரும் கடுமையான வானிலை மாற்றம் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மேற்கு ஆஸ்திரேலியாவின் கிரேட் சதர்ன் மாகாணத்தின் பரந்த நிலப்பரப்பில் உள்ள புதர் நிலங்களில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. கடந்த ஜனவரியில் ஆறு நாட்களாக தொடர்ந்து 40 டிகிரி செல்சியஸூக்கும் மேல் இருந்த வெப்ப நிலை கோடைக்காலத்தில் நிலவும் பொதுவாக வெப்பநிலையை முறியடித்தது.
அந்த வகையில் வெப்பநிலை அதிகமாக இருக்கும்போது காட்டுத்தீயும் வேகமாக பரவும் என கூறப்படும் நிலையில் காட்டு தீ இன்னும் தீவிரமடையும் என மாநிலத்தின் தீயணைப்பு மற்றும் அவசர சேவை துறை அறிவித்துள்ளது. இதனால் சில உள்ளூர் பகுதிகளுக்குள் நுழைய பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் நாட்டின் கிழக்குப் பகுதியில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இப்படியான கடுமையான வானிலை மாற்றத்தின் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.