காட்டு யானையை விரட்டிய நான்கு வீர நாய்கள்
கர்நாடகாவில் ஒற்றை காட்டு யானையை விரட்டிய வளர்ப்பு நாய்கள்
கர்நாடகா மாநிலம் ஹாசன் பகுதியில் குடியிருப்பு பகுதிக்கு அருகே வந்த ஒற்றை காட்டு யானையை வளர்ப்பு நாய்கள் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புர் ஆ அருகே உள்ள மத்தூர் கிராமத்தில் ஒரு விவசாயி குடியிருப்புக்கு அருகே ஒற்றை காட்டு யானை வந்துள்ளது.
காட்டு யானை பார்த்த விவசாயின் வளர்ப்பு நாய்கள் அந்த யானை குடியிருப்பு பகுதிக்கு நுழையவிடாமல் விவசாயியின் 4 வளர்ப்பு நாய்கள் யானையை துரத்த முயன்றனர்.
ஆக்ரோஷம் அடைந்த காட்டு யானை நாய்களை விரட்டின .அந்த நாய்கள் காட்டு யானைக்கு எதிரே நின்று அரை மணி நேரம் போராடி விரட்டியடித்தது.
இந்த சம்பவத்தை விவசாயி வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.