அண்ணாமலை பாதயாத்திரையை தெறிக்கவிட்ட காட்டெருமை - அலறி ஓடிய நிர்வாகிகள்!
K. Annamalai
Dindigul
By Sumathi
அண்ணாமலை நடத்தும் பாதயாத்திரையில் காட்டெருமை நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பாதயாத்திரை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் பாதயாத்திரை நடத்தி வருகிறார். இரண்டாம் கட்ட பாதயாத்திரையை தொடங்கியுள்ள நிலையில்,
திண்டுக்கல்லில் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, கொடைக்கானலுக்கு சென்றிருந்தார். தொடர்ந்து, அண்ணாமலை வேனில் வந்து பேசிக் கொண்டிருந்தார்.
பரபரப்பு
அப்போது திடீரென தூரத்தில் கூட்டத்தை பிளந்து கொண்டு பெரிய காட்டெருமை வந்தது. அதனை பார்த்த பாஜகவினர் அலறி ஓடினர்.
பின் அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்த காட்டெருமை அங்கிருந்து சென்றது.
இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.