தகாத உறவில் உல்லாசம் - இடையூறாக இருந்த கணவருக்கு ஸ்கெட்ச் போட்ட மனைவி !
கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த கணவரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கணவர் கொலை
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் காந்தியார் தெருவில் வசித்து வந்த தம்பதிகள் சக்திவேல் -தீபா. இவர்களுக்கு ௨ குழந்தைகள் உள்ளனர். சக்திவேல் வெளியூரில் வேலைசெய்து வந்த நிலையில் தீபா ௨ குழந்தைகளுடன் வீட்டில் வசித்தது வந்துள்ளார்.
இந்நிலையில் தீபாவுக்கும் அங்கு வட்டிக்கு பணம் கொடுக்கும் சுகுமார் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இவர் தீபாவுக்கு அதிக பணம் கொடுத்து தகாத உறவில் இருந்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்து வந்துள்ளனர்.
இந்த கள்ளத்தொடர்பு மூலம் தீப செல்வ செழிப்புடன்வாழ்ந்து வந்துள்ளார். அப்போது ஒருநாள் வெளியூரில் இருந்து கணவர் சக்திவேல் வீட்டிற்கு வந்தபோது மனைவி செல்வ செழிப்பாக இருப்பதைப் பார்த்து சந்தேகமடைந்தார்.
இதுகுறித்தது சக்திவேல் மனைவியிடம் கேட்க சுகுமார் பணம் கடனாக கொடுத்து உதவியதாக கூறியுள்ளார். அதனால் சுகுமாருடன் சக்திவேல் நண்பராக பழகி இருவரும் தினமும் வீராணம் ஏரிக்கரையில் அமர்ந்து மது அருந்தி வந்துள்ளனர். அதனைத்தொடர்ந்து மனைவியின்மீதான சந்தேகம் வலுக்கவே அதுகுறித்தது மனைவியிடம் கேட்டு சண்டையிட ஆரம்பித்துள்ளார். அப்போது அவர்களின் கள்ளத்தொடர்பு தெரிய வந்துள்ளது.
கைது
எனவே கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருக்கும் கணவரை தீதத்துக்காட்ட தீபாவும் கள்ளக்காதலன் சுகுமாரும் திட்டம் போட்டுள்ளனர். பின்னர் சுகுமார் தனது நண்பர்கள் சிலம்பரசன் சக்தி ஆகியோருடன் சேர்ந்து சக்திவேலை வீராணம் ஏரிக்கரைக்கு அழைத்து சென்று
மது கொடுத்து சக்திவேலுக்கு போதை தலைக்கேறியதும் அருகில் இருந்த பாலித்தீன் கவரை கொண்டு சக்திவேலின் தலையை மூடி கயிரைக்கொண்டு கழுத்தை இறுக்கி கொலை செய்து அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.