போதையில் மயங்கி கிடந்த கணவன் - செருப்பால் அடித்து இழுத்துச் சென்ற மனைவி

karur family issue
By Petchi Avudaiappan Aug 30, 2021 06:58 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

மதுபோதையில் மயங்கி கிடந்த கணவனை மனைவி செருப்பால் அடித்த சம்பவம் கரூரில் அரங்கேறியுள்ளது.

கரூர் மாவட்டம் தான்தோன்றிமலையில் உள்ள மதுபான கடைக்கு வந்த அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், அளவுக்கு அதிகமாக மது குடித்துள்ளார். பின்னர் மதுபாட்டிலுக்கு கூடுதலாக பணம் வாங்கிய கடை விற்பனையாளரிடம் தகராறில் ஈடுபட்டதாகவும், ஊழியர்களி அவரை அடித்ததாகவும் கூறப்படுகிறது.

இதில் சாலையில் விழுந்த அவர் போதையில் மயங்கி கிடந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் அந்த நபரின் மனைவிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து டாஸ்மாக் கடை வாசலுக்கு வந்த அந்த நபரின் மனைவி போதையில் படுத்திருந்த கணவரை எழுப்ப முயன்றார்.

அவர் எழுந்திருக்காத நிலையில் கோபமடைந்த அந்த பெண் செருப்பை கழட்டி தன் கணவரை அடித்தார். இதில் அரைகுறையாக போதை தெளிந்த நிலையில் அவரை மனைவி வீட்டிற்கு இழுத்துச் சென்றார்.