மனைவியின் உதடோடு உதடு வைத்த கணவருக்கு நிகழ்ந்த கொடூரம் - சிதைந்து போன நாக்கு..!

Andhra Pradesh
By Thahir Jul 22, 2023 11:53 AM GMT
Report

மனைவியை சமாதானம் செய்ய கணவர் உதடோடு உதடு வைத்து முத்தம் கொடுத்த போது நேர்ந்த சம்பவம் மருத்துவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

மனைவிக்கு உதட்டு முத்தம் 

ஆந்திர மாநிலம் கர்னுால் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தாரசாந்த் இவரது மனைவி புஷ்பாவதி. இவர்கள் இருவருக்கும் அடிக்கடி சிறு சிறு பிரச்சனைகளுக்காக சண்டையிட்டு கொள்வதும், சமாதானமாவதும் வாடிக்கையாக இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் ஒரு நாள் கணவன் மனைவி இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டு இருக்கிறது. அப்போது திட்டிக் கொண்டிருந்த தனது மனைவியை சமாதானம் செய்வதற்காக கணவர் தாராசந்த் மனைவியின் முகத்தை பிடித்து இழுத்து உதட்டில் முத்தம் கொடுத்து உள்ளார்.

சிதைந்து போன நாக்கு 

இதனால் ஆத்திரம் அடைந்த அவரது மனைவி புஷ்பாவதி தனது கணவரின் நாக்கை பல்லால் கடித்து இழுத்துள்ளார்.

wife who bit the tongue of the husband

இதில் அவரது நாக்கு சிதைந்து தொங்கியதால் கதறிய தாராசந்த் பேச இயலாமல் ரத்தம் சொட்ட சொட்ட மருத்துமவமனைக்கு சென்றுள்ளார்.

பின்னர் அவருக்கு மருத்துவரின் அறிவுறுத்தலின் படி நாக்கில் தையல் போட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.