தனது மனைவியினை விபச்சாரி என்று பதிவிட்டு ஆபாச வீடியோ வெளியிட்ட கணவன் கைது

wife-video-arrest-husband
By Jon Jan 02, 2021 08:56 AM GMT
Report

மனைவியின் ஆபாச வீடியோவை வெளியிட்டு, தனது மனைவியை விற்பதாக சமூக வலைதளங்களில் வெளியிட்ட ,அப்பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டார். திருப்பதியில் உள்ள தேவஸ்தான கல்லூரி விடுதியில் பணியாற்றும் ரேவந்த் குமார், தனது இவர் திருப்பதிக்கு அருகே உள்ள திம்மபாளையத்தில் வசித்து வருகிறார்.

இவருக்கும் பெங்களூருவை சேர்ந்த (21)நிரோஷா என்ற இளம்பெண்ணை காதலித்து 4 மாதங்களுக்கு முன்பு பெற்றோர் அனுமதியோடு திருமணம் செய்துள்ளார்.

ஆனால்,திருமணமான 3 நாட்களில் வரதட்சனை கேட்டு நிரோஷாவை, ரேவந்த் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த நிரோஷா கடந்த 5 நாட்களுக்கு முன்பு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் மனைவியின் ஆபாச படங்களை தனது வாட்ஸ்-அப் குழுவில் உள்ள நண்பர்களுக்கு ரேவந்த் பரப்பியுள்ளார். அதோடு தேவைப்படுவோருக்கு தனது மனைவியை விற்க தயாராக இருப்பதாக பதிவிட்டு இருந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த நிரோஷா தனது பெற்றோருடன் திருப்பதிக்கு வந்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் ஏற்கனவே ரேவந்த், தனது மனைவி ரூ.20 லட்சம் பணம் மற்றும் நகைகளோடு வீட்டை விட்டு ஓடி விட்டதாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதையடுத்து தவறாக புகைப்படங்களை வெளியிட்ட தனது கணவனை கைது செய்யவேண்டுமென அவரது வீட்டு முன்பு நிரோஷா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதன் பின்பு வழக்கு பதிவு செய்த போலீசார்,விசாரணை நடத்தி ரேவந்த்தை கைது செய்தனர். மேலும், ரேவந்த் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மகளிர் சங்கத்தினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.