கணவர் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. செல்போனில் வீடியோ எடுத்து ரசித்த மனைவி!
15 வயது சிறுமியை தன் கணவன் பாலியல் வன்கொடுமை செய்வதை மனைவி செல்போனில் வீடியோ எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் தொல்லை
உத்தரப்பிரதேசம், புடான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரிஷிகுமார்(27). அவரது மனைவி சவிதா(வயது 24). கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தான் இவர்களுக்கு திருமணம் நடந்திருக்கிறது.

திருமணம் நடந்து ஒரு வருடத்திற்குள்ளேயே ரிஷி குமார் அதே பகுதியில் உள்ள 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். அதற்கு அவரது மனைவியும் உடந்தையாக இருந்திருக்கிறார்.
மனைவி வீடியோ
பலமுறை அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த போதும் அந்த சிறுமி தப்பித்து சென்றிருக்கிறார். ஒரு நாள் வலுக்கட்டாயமாக அந்த சிறுமியை தனது வீட்டிற்குள் இழுத்து வந்திருக்கிறார்.

அந்த சிறுமி வேண்டாம் வேண்டாம் என்று பலமுறை மறுத்தும் கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அதை செல்போனில் வீடியோவாக எடுத்திருக்கிறார் சவீதா.
மிரட்டல்
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பின்னர் அதை வீடியோவாக எடுத்து முடித்த பின்னர் இங்கு நடந்தது வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது. சொன்னால்
இந்த வீடியோவை பேஸ்புக், வாட்ஸ் அப்பில் வெளியிட்டு விடுவோம் என்று சொல்லி மிரட்டி இருக்கிறார்கள் கணவன்- மனைவி. இதனால் எதுவும் சத்தம் போடாமல் அங்கிருந்து சென்றிருக்கிறார்.
போக்சோ வழக்கு
சிறுமி வீட்டிற்கு சென்றதும் மகளின் நடத்தையில் மாற்றத்தை உணர்ந்த பெற்றோர், விசாரித்து போது தான் ரிஷிகுமார் -சபிதா செய்த கொடூரத்தை சொல்லி இருக்கிறார்.
கணவன் மனைவி சேர்ந்து இப்படி செய்திருக்கிறார்கள் என்று ஆத்திரமடைந்த அவர்கள் போலீசில் புகார் அளிக்க ரிஷிகுமாரையும் சவீதாவையும் போலீசார் கைது செய்து உள்ளனர். அவர்கள் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது
இலங்கையில் முதன் முறையாக பயன்படுத்தப்பட்ட அதிக சக்திவாய்ந்த வெடிபொருள்! ஈஸ்டர் வழக்கில் ஜமைக்காவில் இருந்து வழங்கப்பட்ட சாட்சியம் IBC Tamil
ஈஸ்டர் சதியுடன் தொடர்புடையவர்கள் வெளியே உள்ளனர்! 6-வது குற்றவாளி வெளியிட்ட பரபரப்பான கருத்து IBC Tamil