ட்ரம்மில் அடைத்து விடுவேன் - கள்ளக்காதலுக்காக கணவனை மிரட்டிய மனைவி
உன்னையும் வெட்டி ட்ரம்மில் அடைத்து விடுவேன் என கணவரை மிரட்டிய மனைவியின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகாத உறவு
உத்தரபிரதேசம், கோண்டா பகுதியைச் சேர்ந்தவர் தர்மேந்திர குஷ்வாஹா. என்ஜினீயராக உள்ளார். இவரது மனைவி மாயா மவுரியா. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
இந்நிலையில், தர்மேந்திரா தனது மனைவி பெயரில் நிலம் ஒன்றை வாங்கி வீடு கட்டுவதற்கான ஒப்பந்ததை மனைவியின் உறவினரான நீரஜ் மவுரியா என்பவரிடம் கொடுத்துள்ளார். தொடர்ந்து வீடு கட்டும் பணி தொடங்கியுள்ளது.
இதனால் அடிக்கடி அங்கு சென்ற மாயா, நீரஜூடன் பேசி பழகியதில் நெருக்கமாகியுள்ளனர். இதில் இருவரும் நெருக்கமாக இருப்பதை தர்மேந்திரா பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே இதுகுறித்து மனைவியிடம் கேட்டதில், அவரும் நீரஜூம் கணவரை தாக்கியுள்ளனர்.
மிரட்டிய மனைவி
மேலும் மாயா வீட்டிலிருந்து நீரஜுடன் சென்றுள்ளார். இதுதொடர்பாக தர்மேந்திரா போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதனால் மாயா இருதினங்களுக்கு முன் வீட்டுக்கு வந்து தர்மேந்திரா மற்றும் அவரது தாய் ஆகியோரை மாயாவும், நீரஜூம் சேர்ந்து கடுமையாகத் தாக்கி, மீரட் படுகொலை போல உன்னையும் வெட்டி டிரம்மில் அடைத்துவிடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், மாயா தனது கணவர் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுவதாகவும், அவர் தன்னை நான்குமுறை கருக்கலைப்பு செய்ய கட்டாயப்படுத்தியதாகவும் போலீஸில் புகாரளித்துள்ளார்.