தற்கொலை செய்துகொள்வேன்..பூச்சாண்டி காட்டிய கண்ணகியால் தெருவில் தத்தளித்த பொதுமக்கள்..!
சென்னை அருகே கணவருக்கு வேறொரு பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பால் கேஸ் சிலிண்டர்களின் திறந்து வைத்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விட்ட பெண்ணால் 100 க்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் முழ்கியது.
சென்னை மணலியில் உள்ள ஈவேரா பெரியார் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் கண்ணா.இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் சூப்பர் வைஸ்சராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கும் மதுரையைச் சேர்ந்த ரேணுகா என்பவருக்கும் 20 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்டனர்.
இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.இந்தநிலையில் ரமேஷ் கண்ணா வேறொரு பெண்ணுடன் காதல் கலந்த திருமண உறவில் ஈடுபட்டுள்ளார்.
இதை மனைவி பல முறை கண்டித்தும் ரமேஷ் கண்ணா கேட்காமல் தனது தெய்வீக காதலை தொடர்ந்துள்ளார். மனைவி ரேணுகா தனது வீட்டில் அழகு நிலையம் நடத்தி வருகிறார்.
சம்பவதன்று தனது கணவரிடம் தகாத காதல் குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ரேணுகா கடும் மன உளைச்சல் அடைந்தார்.
இதையடுத்து அவர் வீட்டின் கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு வீட்டில் இருந்த 3 சமையல் சிலிண்டர்களையும் திறந்து வைத்து தனது வாழ்க்கைக்கு நீதி கிடைக்கா விட்டால் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கும்,தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து நிகழ்விடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர் ஆனால் ரேணுகா அதை கண்டுகொள்ளாமல் உள்ளே அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது.
சமையல் சிலிண்டர் திறந்து வைத்துள்ளதால் ஏதும் அசம்பாவிதம் நிகழாமல் இருக்க அப்பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டது.
மேலும் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மதியம் 12 மணியிலிருந்து 100க்கும் மேற்பட்ட வீடுகளை சேர்ந்த பொதுமக்கள் இரவு 8 மணிக்கும் மேலாக வீதியில் தவித்தனர்.
மேலும் ரேணுகாவின் பெற்றோர் மற்றும் அவரது நண்பர்கள் அவரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டனர் ஆனால் அவர் அழைப்பை ஏற்க வில்லை.
இதனால் நீண்ட நேரமாக வீதியில் காத்திருந்த பொதுமக்கள் கடும் ஆத்திரம் அடைந்தனர். இதையடுத்து தீயணைப்பு துறையினர் ரேணுகாவின் வீட்டின் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று தண்ணீரை பீச்சி அடித்தனர்.
அப்போது அங்கு ரேணுகா வீட்டில் மயங்கி கிடந்தார்.பின்னர் அவரை மீட்ட தீயணைப்புத்துறை அதிகாரிகள் மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் ரேணுகா மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீசார் தெரிவித்தனர்.