முதலிரவில் ஷாக் கொடுத்த மனைவி - குமுறிய கணவன்! என்ன நடந்தது?
திருமணம் செய்துக் கொண்டு கணவரிடம் இருந்து பணம், நகைகளை மனைவி திருடிச் சென்றுள்ளார்.
2வது திருமணம்
சேலம், எடப்பாடு கொங்கணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்(48). இவர் லாரி டிரைவராக உள்ளார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். கடந்த 11 மாதத்திற்கு முன்பு மனைவி இறந்துள்ளார். இந்நிலையில், ஜோடி ஆப் மூலம் 2வது திருமணம் செய்து கொள்ள பதிவு செய்துள்ளார்.
அதே ஜோடி ஆப்பில் கன்னியாகுமரி, மார்த்தாண்டத்தைச் சேர்ந்த கவிதா என்ற பெண்ணும் பதிவு செய்து இருவரும் செல்போனில் பேசி வந்தனர். அப்போது கவிதா தன்னுடைய கணவர் இறந்து விட்டதாகவும் செந்திலை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி தேவைப்படும்போது பணம் வாங்கியுள்ளார்.'
ஏமாற்றிய மணைவி
கடந்த ஜூன் மாதம் சேலம் வந்த கவிதாவை, திருமணம் செய்து கொண்டு செந்தில் தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். முதலிரவில், 4 1/2 பவுன் நகை, வெள்ளிக்கொலுசு, ரொக்கப்பணம் என 2 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை எடுத்துக்கொண்டு கவிதா தப்பியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்யாமல் சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறி கவிதா தரப்பிலிருந்து 2 வழக்கறிஞர்களை ஸ்டேஷனுக்கு அழைத்துள்ளனர்.
கனவன் அதிர்ச்சி
அப்போது, செந்திலிடம் பணம், நகையை திருப்பி தருவதாக கூறி ஏமாற்றியுள்ளனர். அதனையடுத்து, செந்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்ததின் பேரில் கொங்கணாபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது சம்மந்தமாக பாதிக்கப்பட்ட செந்தில் கூறும்போது, தனது மனைவி இறந்து விட்ட நிலையில் தனது குழந்தைக்கு பாதுகாப்பு வேண்டும் என்ற நோக்கில் ஜோடி ஆப் மூலம் 2வது திருமணம் செய்ய ஏற்பாடு செய்ததாகவும்
இதில் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த கவிதா என்ற பெண்ணிடம் ஏமாற்றப்பட்டதாகவும் என்னிடமிருந்து கவிதா திருடிச்சென்ற பணம் நகைகளை திரும்ப பெற போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
மேலும், ஏமாற்றிய பெண் தண்ணிடம் பேசிய ஆடியோ மற்றும் போட்டோ, வங்கிகணக்கிலிருந்து பணம் அனுப்பிய ஆதாரம் இருப்பதாகவும் கூறினார்.