ஓமனில் கொரோனாவால் உயிரிழந்த தொழிலாளி: உடலை தமிழகம் கொண்டு வர மனைவி கோரிக்கை

Death Deportation Mayiladuthurai Muscat
By mohanelango May 01, 2021 05:21 AM GMT
Report

வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யக்கோரி மஸ்கட்டில் உயிரிழந்த தொழிலாளியின் மனைவி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு.

மயிலாடுதுறை 1-வது புதுத்தெருவைச் சேர்ந்தவர் கணேஷ். கடந்த 10 ஆண்டுகளாக மஸ்கட்டில் வேலை பார்த்து வந்த இவர்; கடந்த வாரம் மஸ்கட்டில் உடல்நிலை பாதிக்கப்பட்டு 24-ஆம் தேதி கொரோனா பரிசோதனை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அவர் 29-ஆம் தேதி உயிரிழந்ததாக கம்பெனி நிர்வாகத்தினர் மயிலாடுதுறையில் உள்ள கணேஷின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

ஓமனில் கொரோனாவால் உயிரிழந்த தொழிலாளி: உடலை தமிழகம் கொண்டு வர மனைவி கோரிக்கை | Wife Request Deportation Of Husband Body From Oman

ஆனால் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததற்கான எந்த ஆதாரத்தையும் தராத நிலையில், தனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,

அந்நிறுவனத்தில் இருந்து உரிய இழப்பீட்டுத் தொகையை பெற்றுத்தர வேண்டும் என்றும் உயிரிழந்ததாகக் கூறப்படும் கணேஷின் மனைவி கல்பனா மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.முருகதாஸிடம் இன்று கோரிக்கை மனு அளித்தார்.

இதையடுத்து, உடனடியாக செயல்பட்ட மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.