கள்ளக்காதலனுடன் ஓடிய பெண்ணை மீண்டும் கணவருடன் சேர்த்த பணம்
மத்தியப்பிரதேசத்தில் கள்ளக்காதலனுடன் ஓடிய பெண் பணம் தீர்ந்த நிலையில் மீண்டும் கணவருடன் சேர்ந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் காஜ்ரானா பகுதியை சேர்ந்த பெரும் கோடீஸ்வரர் ஒருவரின் 45 வயதான மனைவி கடந்த அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி தன்னைவிட 13 வயது குறைவான ஆட்டோ டிரைவருடன் வீட்டை விட்டு வெளியேறினார். அவர் தன் கையில் சுமார் ரூ. 47 லட்சம் பணத்தையும் எடுத்து சென்றதால் கோடீஸ்வரர் இது குறித்து போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் அந்த ஆட்டோ டிரைவரையும் கோடீஸ்வரரின் மனைவியையும் பல்வேறு இடங்களில் தேடினர். ஆட்டோ டிரைவரின் நண்பர்களை பிடித்ததில் அவர்களிடம் ரூ34 லட்சம் பணத்தை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. ரூ13 லட்சம் பணம் கள்ளக்காதல் ஜோடியிடம் இருந்தது. போலீசாரும் இவர்கள் இவரையும் செல்போன் சிக்னல்கள் என பலவிதமாக தேட இவரும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை அந்த கோடீஸ்வரரின் மனைவி இந்தூர் காஜ்ரானா போலீஸ் ஸ்டேஷனிற்கு வந்து ஆஜரானார். அங்கு அவரிடம் போலீசாரிடம் விசாரணை நடத்திய போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது. அவர் தனது கோடீஸ்வர கணவர் வீட்டில் தன்னை டார்ச்சர் செய்ததாகவும், அவரது தொல்லை தாங்க முடியாததால் அந்த விஷயத்தை ஆட்டோ டிரைவரிடம் சொன்ன போது அவருக்குள் தனக்கும் கள்ளக்காதல் மலர்ந்ததாகவும்,அதனாலேயே வீட்டை விட்டு ஓடியதாகவும், தற்போது தான் தன் கணவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும், கூறினார்.
அந்த கோடீஸ்வரரை அழைத்து போலீசார் விசாரித்த போது அவரும் தன் மனைவியை ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தார். ரூ34 லட்சம் ஏற்கனவே மீட்கப்பட்ட நிலையில் ரூ13 லட்சத்தை செலவு செய்துவிட்டதாகவும், தான் கொண்டு சென்ற நகை தன்னிடம் இருப்பதாகவும் மனைவி சொல்லியுள்ளார். அதன் பின்னர் அவரை அவரது கணவருடன் அனுப்பி வைத்தனர். கணவர் தொல்லையால் ஆட்டோ டிரைவருடன் ஓடிப்போன மனைவி பணம் எல்லாம் தீர்ந்த பின்பு மீண்டும் கணவரிடமே வந்த சம்பவம் தற்போது வைரலாக பரவி வருகிறது.