ZOHO சிஇஓ ஸ்ரீதர் வேம்பு மீது மனைவி பரபரப்பு புகார் - சொத்துக்களை மாற்றி எழுதினாரா?

By Thahir Mar 14, 2023 07:45 AM GMT
Report

தன்னையும், ஆட்டிசம் குறைபாடு உள்ள தன் மகனையும் கணவர் ஸ்ரீதர் வேம்பு நிர்கதியாக விட்டுவிட்டார் என அவரது மனைவி பிரமிளா பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

மனைவி பரபரப்பு புகார் 

ஜோஹோ நிறுவனத்தின் சிஇஓ ஸ்ரீதர் வேம்பு இவர் தற்போது கலிபோர்னியாவில் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில், அவரது மனைவி பிரமிளா குற்றம் சாட்டியுள்ளார்.

ஜோஹோ சிஇஓ ஸ்ரீதர் வேம்பு ஆட்டிசம் குறைபாடு உள்ள தன் மகனையும் தன்னையும் 2020 ஆம் ஆண்டு நிர்கதியாக விட்டு விட்டு சென்று விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

wife-pramila-complains-against-sridhar-vembu

கலிபோர்னியாவில் தன்னுடன் வாழ்ந்த காலத்தில் அவர் ஜோகோ நிறுவனத்தின் தனது பெயரில் இருந்த பங்குகளை தனக்கு தெரியாமல் அவரது சகோதரி மற்றும் சகோதரி கணவர் பெயருக்கு வேம்பு மாற்றிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

கலிபோர்னியாவின் மனைவியின் ஒப்புதல் இல்லாமல் கணவர் சொத்துக்களை விற்க முடியாது என்று சட்டம் உள்ள நிலையில், ஸ்ரீதர் வேம்பு தனது உறவினர் பெயர்களில் சொத்துக்களை மாற்றியது சட்டவிரோதம் என்று பிரமிளாவின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.