அடிக்கடி பிரச்சனை..கணவன் மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றிய மனைவி - இறுதியில் நேர்ந்த விபரீதம்!

Tamil nadu Madurai Crime
By Swetha Jul 23, 2024 04:12 AM GMT
Report

 கணவன் மீது கொதிக்கும் வெந்நீரை மனைவி ஊற்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கணவன்- மனைவி

மதுரை மாவட்டம், திருமங்கலம் கூடகோவில் அருகே உள்ள உலகாணி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பு (32). இவர் லாரி ஓட்டி வருகிறார். இவருடைய மனைவி ஜோதிமணி (28), மாமனார் முருகன், மாமியார் மாணிக்கவள்ளி. சில வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற விபத்தில் டிரைவர் கருப்புவுக்கு ஒருகாலில் முறிவு ஏற்பட்டது.

அடிக்கடி பிரச்சனை..கணவன் மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றிய மனைவி - இறுதியில் நேர்ந்த விபரீதம்! | Wife Pours Boiling Water On Husband Due To Problem

இதனால் அவரால் வேலைக்கு போகவில்லை. எனவே மனைவி ஜோதிமணி வேலைக்கு சென்று வந்தார். ஜோதிமணியின் பெற்றோரும் அந்த வீட்டில்தான் வசித்து வந்தார்கள். குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது.

அப்பப்பா.... தொடர்ந்து வெந்நீர் குடித்து வந்தால் இவ்வளவு நன்மையா? நீங்களே அசந்துடுவீங்க!

அப்பப்பா.... தொடர்ந்து வெந்நீர் குடித்து வந்தால் இவ்வளவு நன்மையா? நீங்களே அசந்துடுவீங்க!

நேர்ந்த விபரீதம்

இந்த நிலையில், மாமனார், மாமியாரிடம் ஏற்பட்ட பிரச்சினையில் கருப்புவை வீட்டை விட்டு வெளியே போக கூறியுள்ளார்கள். பிரச்சினை அதிகமாகவே கொதிக்கும் வெந்நீரை மாமியார், மாமனார், மனைவி ஆகிய மூவரும் சேர்ந்து தூக்கி வந்து கருப்பு மீது ஊற்றியதாக கூறப்படுகிறது.

அடிக்கடி பிரச்சனை..கணவன் மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றிய மனைவி - இறுதியில் நேர்ந்த விபரீதம்! | Wife Pours Boiling Water On Husband Due To Problem

இதில் அவர் உடல் வெந்து பலத்த காயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொடுத்த புகாரின் பேரில் மாமனார் முருகன், மாமியார் மாணிக்கவள்ளி, மனைவி ஜோதிமணி ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.