பாஜக தேர்தல் விளம்பரத்தில் பிரபல அரசியல்வாதியின் மனைவி! தாமரை மலராது என கடுமையான விமர்சனம்

advertisement wife dance bjp chidambaram
By Jon Mar 30, 2021 06:20 PM GMT
Report

கவின் தேர்தல் விளம்பரத்தில் சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரத்தின் மனைவி புகைப்படம் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது. தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மக்களின் வாக்குகளை சேகரிக்க ஒவ்வொரு கட்சியும் வித்தியாசமான யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் பாஜக வெளியிட்ட தேர்தல் விளம்பரத்தில், பரதநாட்டியம் ஆடும் பெண்ணின் படம் இடம்பெற்றிருந்தது. அப்பெண், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மருமகளும், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்தின் மனைவியுமான, ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம் ஆவார்.

இந்த விளம்பரம் வைரலான நிலையில், கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது, இதுகுறித்து ஸ்ரீநிதி கூறுகையில், பாஜகவின் தேர்தல் விளம்பரத்துக்காக எனது புகைப்படத்தை பயன்படுத்தியது அபத்தம். தமிழகத்தில் தாமரை என்றும் மலராது என தெரிவித்துள்ளார். குறித்த படம் ”செம்மொழியான தமிழ்மொழியே” என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.