லஞ்சம் வாங்கியதாக நீக்கப்பட்டவரின் மனைவிக்கு பொறுப்பு
By Fathima
லஞ்சம் வாங்கியதற்காக தவெகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணைச்செயலாளரின் மனைவிக்கு அதே பொறுப்பு வழங்கப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவரான வீராசாமி, தவெக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணைச்செயலாளராக இருக்கிறார்.
இவர் நவீன் என்பவரிடம் இருந்து லஞ்சம் பெற்றதாக வீடியோ வெளியானது, இதனை தொடர்ந்து அவர் கட்சிப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதுடன் போலிசார் கைது செய்தனர்.
இந்நிலையில் அவரது மனைவிக்கு அதே பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
லஞ்சம் வாங்கிய வீடியோவில் அவர் மனைவியுடன் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
