ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவி வாயில் ஆசீட் ஊற்றி கொலை செய்த கொடூரக் கணவன் - அதிர்ச்சி சம்பவம்

Attempted Murder
By Nandhini Jul 14, 2022 10:37 AM GMT
Report

அசாமில் கணவருடன் உறவினர்கள் சேர்ந்து பெண் வாயில் ஆசிட் ஊற்றி அவரை குடிக்க வைத்து கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

வாயில் ஆசீட் ஊற்றிய கணவன்

அசாம், கரீம்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷகீல் அகமது. இவரது மனைவி சும்னா பேகம். இந்நிலையில், மனைவி சும்னா பேகத்தை கணவர் ஷகீல், உறவினர்களுடன் சேர்ந்து கொடூரமாக தாக்கி ஆசீட் குடிக்க வைத்துள்ளார்.

இவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பேகம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து கரீம்கஞ்ச் மாவட்ட போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பேகமின் குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

acid

இன்று இச்சம்பவம் குறித்து போலீஸ் சூப்பிரெண்டு பத்மநாப பருவா செய்தியாளர்களிடம் கூறியதாவது -

பேகம் கடந்த சில நாட்களாக அவரது கணவர் மற்றும் உறவினர்களால் கடுமையாக மன மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தப்பட்டு வந்துள்ளார். இந்த வழக்கில் கணவர் ஷகீல் அகமதுரை கைது செய்துள்ளோம். பெண் குழந்தை பெற்றதற்காக கணவர் மற்றும் அவரது உறவினர்கள் பேகம் மீது ஆத்திரம் அடைந்து பேகத்தை இப்படி கொடுமைப்படுததியுள்ளனர். ஆண் குழந்தை பெற்றெடுக்காததற்காக ஆசிட் குடிக்க வைத்து அவரை கொலை செய்துள்ளனர். இதுபற்றி தொடர்ந்து போலீசாரின் விசாரணை நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆண் குழந்தை பெற்றெடுக்காததால், மனைவியை, கணவர் மற்றும் உறவினர்களே ஒன்று சேர்ந்து வாயில் ஆசிட் ஊற்றி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.