5 ஆண்டுகளுக்கு முன் கொலை; திடீரென உயிருடன் வந்த பெண் - பயங்கர பின்னணி
5 ஆண்டுகளுக்கு முன் கொலை செய்யப்பட்டதாக எண்ணிய பெண் உயிருடன் திரும்பி வந்துள்ளார்.
மாயமான மனைவி
கர்நாடகா, குஷால்நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி மல்லிகா. இரண்டு குழந்தைகள் உள்ளனர். 2020ல் மல்லிகா காணாமல்போன நிலையில், சுரேஷ் போலீசில் புகார் அளித்துள்ளார்.
தொடர்ந்து 7 மாதங்களுக்கு பின் எலும்பு கூடு ஒன்றை காண்பித்து, அடையாளம் காண கூறிய நிலையில் எலும்புகூடுக்கு அருகே மனைவியின் செருப்பு இருந்ததால், சுரேஷ் தனது மனைவி தான் என உறுதி செய்துள்ளார். இதனையடுத்து மனைவியை கொலை செய்ததாக சுரேஷ் கைது செய்யப்பட்டார்.
காதலனுடன் 5 ஆண்டு
பின், டிஎன்ஏ பரிசோதனையில் அது மல்லிகாவின் எலும்பு கூடு இல்லை என்பது தெரியவந்ததையடுத்து, சுரேஷ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், மடிகேரி பகுதியில், மல்லிகா வேறொருவருடன் தேநீர் அருந்திக்கொண்டிருந்ததை சுரேஷ் பார்த்துள்ளார்.
உடனே போலீஸாருக்கு தகவல் அளித்ததில், மல்லிகாவிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் மல்லிகா காதலரான வேறு ஒரு நபருடன் 5 ஆண்டுகளாக வாழ்ந்து வந்தது தெரியவந்தது.
தற்போது மல்லிகாவை மகளிர் இல்லத்துக்கு அழைத்து செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.