கணவரின் அழுகிய சடலத்துடன் வாழ்ந்து வந்த பெண் - விசாரணையில் வெளியான பகீர் தகவல்!
அழுகிய சடலத்துடன் பெண் ஒருவர் மூன்று நாட்கள் வசித்து வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அழுகிய சடலம்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் முஸ்லிம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் ஆதிரத்தினமூர்த்தி. இவரது மனைவி பரிமளா. இருவரும் அதே தெருவில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இருவருக்கும் குழந்தைகள் இல்லாத நிலையில் பரிமளா மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த மூன்று நாட்களாக ஆதிரத்தினமூர்த்தியின் வீட்டில் இருந்து ஏதோ துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பத்தினர் காவல் நிலையத்தி புகார் தெரிவித்தனர். அதன்படி, சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார்கள் வீட்டின் பூட்டை உடைத்து திறந்து பார்த்தனர்.
பகீர் தகவல்
அப்போது ஆதிரத்தினமூர்த்தி கட்டிலில் அழுகிய நிலையில் இறந்து கிடந்ததுள்ளார். மேலும் அவரது மனைவி பரிமளா பூட்டிய வீட்டிற்குள்ளேயே இருந்ததை கண்டு காவலர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதனை தொடர்ந்து, போலீசார் இது பற்றி நடத்திய விசாரணையில், ஆதிரத்தினமூர்த்தி கடந்த 6 மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்ததும், கணவன் இறந்தது கூட தெரியாமல் மனைவி வீட்டிற்குள்ளேயே இருந்து சமைத்து வசித்து வந்ததாகவு தெரியவந்தது.
இதையடுத்து ஆதிரத்தினமூர்த்தியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து அவரது மனைவியிடம் தீவரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கணவர் இறந்தது தெரியாமல் சடலத்துடன் வீட்டுக்குள்ளேயே 3 நாட்கள் மனைவி வசித்து வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.