நடத்தை மீது சந்தேகப்பட்ட கணவரை கத்திரிக்கோலால் குத்தி கொன்ற மனைவி போலீசில் சரண்
பொள்ளாச்சியில் சந்தேக கணவரை கத்திரிக்கோலால் குத்தி கொலை செய்த மனைவி காவல் நிலையத்தில் சரணடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சியை அடுத்த வடக்கிபாளையம் தண்ணீர் தொட்டி வீதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (36) .
பாம்பு பிடிப்பது மற்றும் கால்நடைகளுக்கு பாரம்பரிய முறையில் வைத்தியம் பார்க்கும் வேலை செய்து வரும் இவர் தையல் தொழில் செய்து வரும் மனைவி மகாலட்சுமியுடன் வசித்து வருகிறார்.
இவர்களுக்கு கிஷோர், மற்றும் நட்சத்திரா என்ற இரு குழந்தைகள் உள்ளனர். குடிப்பழக்கம் உள்ள வினோத்குமார் மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி சண்டையில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.
நேற்று இரவு வினோத்குமாருக்கும் மனைவி மகாலட்சுமிக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் மனைவி மகாலட்சுமி தையல் தொழிலுக்கு பயன்படுத்தபடும் கத்திரிக்கோலை எடுத்து வினோத்குமாரை நெஞ்சில் ஆழமாக குத்தியதாக தெரிகிறது.
வினோத்குமாரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே வினோத்குமார் உயிரிழந்தார். கணவர் உயிரிழந்து விட்டார் என்ற தகவல் கிடைத்ததும் வடக்கிபாளையம் காவல் நிலையத்தில் மகாலட்சுமி சரண் அடைந்தார்.
மகாலட்சுமியை கைது செய்த போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முள்ளிவாய்காலின் இறுதிக் கணங்கள் : மனதை உறையவைக்கும் காட்சிகள் (வயது வந்தவர்களுக்கு மட்டும்) IBC Tamil

ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை ஆதாரமாக உலகை உலுக்கிய No fire zone தமிழில் (கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும்) IBC Tamil
