தகாத உறவில் மோகம்; கணவரை கொன்று சாலையில் வீசிய மனைவி - பகீர் பின்னணி!
கள்ளக் காதலனுடன் சேர்ந்து மனைவி, கணவனை கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
தகாத உறவு
ராஜஸ்தான், ஜெய்ப்பூரில் சுற்றுவட்ட சாலை பகுதியில் பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
உடனே, சம்பவ இடம் விரைந்த போலீஸார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில், இறந்தது காய்கறி வியாபாரியான தனலால் சைனி என்பது தெரியவந்தது. பின் அவரது மனைவி கோபாலி தேவியிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.
கணவன் கொலை
அதில், கடந்த 5 ஆண்டுகளாக கோபாலி தேவி தீனதயாள் என்பவருடன் தகாத உறவில் இருந்துள்ளார். இதையறிந்த கணவன் கண்டித்துள்ளார். இருப்பினும் காதலனுடன் உறவை தொடர்ந்துள்ளார். ஒருகட்டத்தில் இருவரும் கடையில் ஒன்றாக இருப்பதை பார்த்து சைனி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த கோபாலி தேவி மற்றும் தீனதயாள், ஒன்று சேர்ந்து, சைனியின் தலையில் இரும்பு ராடால் பலமாக தாக்கி, கயிற்றால் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். தொடர்ந்து உடலை சாக்கு மூட்டையில் கட்டி இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று சாலையில் வீசியுள்ளனர்.
மேலும், சாலை பகுதி அருகே சைனியின் உடலை எரித்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர். இதன் அடிப்படையில் தற்போது இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.